தெலுக் இந்தான் ஆடவர் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளி!
- Muthu Kumar
- 11 Oct, 2024
ஈப்போ, அக்.11-
நேற்றுக்காலை சுமார் 5.00 மணியளவில் ஹிலிர் பேராக் மாவட்ட போலீஸ் நிலையத்திற்கு ஒரு கொலை தொடர்பான புகார் கிடைக்கப்பெற்றது. அதன் தொடர்பாக சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று நடவடிக்கைகள் மேற்கொண்டனர். இக்கொலையின் சந்தேக நபர்களை போலீசார் விசாரணை செய்து வருவதாக பேராக் போலீஸ்படை தலைவர் டத்தோ பாஹலவான் ஹஜி அஜிசி ஹஜி மாட் அரிஸ் கூறினார்.
இச்சம்பவத்தில் 27 வயது மதிப்புள்ள வங்காளதேச ஆடவர் புதர் ஒன்றில் இறந்து கிடந்துள்ளார். தெலுக் இந்தானில் தாமான் லெஜண்டா வீடமைப்பு கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. அங்குள்ள தொழிலாளர்களில் ஒருவர்தான் இந்த ஆடவர் என்று அவர் குறிப்பிட்டார்.
கழுத்து பகுதியில் ரத்தகாயங்களுடன் அவர் இறந்து கிடந்துள்ளார். இவரின் உடலை பரிசோதனை செய்யும் பொருட்டு தெலுக் இந்தான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. தற்போது மருத்துவ அறிக்கைக்காக காத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக அவரது 3 நண்பர்களை போலீசார் விசாரணைக்காக தடுத்து வைத்துள்ளனர். இங்கு சுமார் 30 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.இவர்கள் 30 வயது முதல் 39 வயதிற்குட்பட்டவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *