கழுத்து நெரிக்கப்பட்டு மாணவி படுகொலை!
- Shan Siva
- 06 Oct, 2026
குவாந்தான், அக் 6:
குவாந்தான், ஆயர் பூத்தே (Air Putih) பகுதியில் உள்ள ஒரு வீட்டில், தனது காதலனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத்
தொடர்ந்து கழுத்து நெரிக்கப்பட்டதாகக் கருதப்படும் நிலையில், 19 வயது மாணவி ஒருவர் சடலமாகக்
கண்டெடுக்கப்பட்டார்.
காவல்துறையினர்
சம்பவ இடத்திற்கு வந்தபோது அங்கு இருந்த 19 வயதுடைய அந்த இளைஞர், விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்தே இச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறி, அதிகாலை 4:32 மணிக்கு அந்த இளைஞர் காவல்துறையினருக்குத் தகவல் அளித்ததாக குவாந்தான் காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் அஷாரி அபு சமா தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட
பெண் வீட்டின் தரைத்தளத்தில் உள்ள படுக்கை ஒன்றில் சுயநினைவற்ற நிலையில்
கிடந்தார்.
சோதனையில்
அப்பெண்ணின் கழுத்தைச் சுற்றிய பகுதியில் அழுத்தம் கொடுக்கப்பட்டதற்கான
அடையாளங்கள் காணப்பட்டன; மருத்துவக் குழுவினர் அவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர் என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

