காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற முகமது எரி ஹிடாயத்
- Surendran Sumdraraj
- 28 Jul, 2026
கிளாஸ்கோ, ஜூலை 28-
“இந்த தங்கப் பதக்கம் என் தந்தைக்காக” என்ற உணர்வுபூர்வமான வார்த்தைகளுடன், மலேசிய பளுதூக்குதல் வீரர் முகமது எரி ஹிடாயத், கிளாஸ்கோ 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆடவர் 79 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கம் வென்று தனது நீண்டநாள் கனவை நனவாக்கினார்.
26 வயதான எரி ஹிடாயத், ஸ்காட்லாந்தின் ஸ்காட்டிஷ் ஈவென்ட் கேம்பஸ் ஆர்மடில்லோ அரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஸ்னாட்ச் பிரிவில் 147 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 184 கிலோவும் தூக்கி, மொத்தம் 331 கிலோ எடையைப் பதிவு செய்து முதலிடத்தைப் பிடித்தார்.
குறிப்பாக, கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் அவர் பதிவு செய்த 184 கிலோ எடையும், மொத்தமாக தூக்கிய 331 கிலோ எடையும் காமன்வெல்த் போட்டியின் புதிய சாதனையாகப் பதிவானது.
வெற்றிக்குப் பிறகு பேசிய எரி ஹிடாயத், இந்த வெற்றியைத் தனது தந்தைக்கு அர்ப்பணிப்பதாகக் கூறினார். கடினமான பயிற்சிகள், குடும்பத்தின் ஆதரவு மற்றும் பயிற்சியாளர்களின் வழிகாட்டுதலே இந்த சாதனைக்கு காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



