திரங்கானு - கூச்சிங் சிட்டி 1-1 சமநிலை!

top-news

செய்தி-வெற்றி மைந்தன்

கோலா திரங்கானு, டிச. 6-

லீகா சூப்பர் போட்டியில் திரங்கானு அணி கூச்சிங் சிட்டி அணியை எதிர்கொண்டது. சுல்தான் மிஸான் ஸைனல் அபிடின் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியை சுமார் 1,500க்கும் மேற்பட்ட திரங்கானு ரசிகர்கள் கண்டுகளித்தனர்.

முதல் பாதியில் கோல் எதுவும் பதிவாகாமல் தோன்றிய நிலையில், முதல் பாதி முடிவதற்கு ஒரு நிமிடம் மட்டுமே இருக்கையில் அதிர்ச்சி கொடுத்தார் கூச்சிங் சிட்டியின் முன்னாள் திரங்கானு வீரர் பெட்ரஸ் ஷிடெம்பி. மோசஸ் அடெடேயின் அற்புதமான நடுப்பகுதி பாஸைப் பயன்படுத்தி, நமீபியா வீரர் ஷிடெம்பி அபாரமாக முடித்து, திரங்கானு கோல்கீப்பர் சுஹைமி ஹுசைனை முறியடித்தார். 1-0 என்ற கணக்கில் கூச்சிங் முன்னிலை பெற்றது.

இரண்டாம் பாதியில் திரங்கானு தீவிரமாக தாக்குதல் நடத்தியும் கோல் அடிக்க முடியாமல் திணறியது. ஆனால், நடுவரின் கூடுதல் நேரத்தில் (90+ நிமிடம்) மாற்று வீரராக களமிறங்கிய எங்கு நூர் ஷாகிர் யாகோப் அசத்தல் கோல் ஒன்றை பதிவு செய்து அணியை சமநிலைக்கு கொண்டு வந்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *