டி.ஆர். காங்கோவை வீழ்த்தியது இங்கிலாந்து

top-news

அட்லாண்டா, ஜூலை 2 –

2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 32 அணிகள் சுற்றில், இங்கிலாந்து அணி பின்தங்கிய நிலையிலிருந்து மீண்டு, டி.ஆர். காங்கோவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 16-ஆவது சுற்றுக்கு முன்னேறியது.

அட்லாண்டா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டி.ஆர். காங்கோ தொடக்கத்தில் முன்னிலை பெற்றதால் ஆட்டம் பரபரப்பாக மாறியது.

ஆனால், பின்னர் இங்கிலாந்து தனது தாக்குதல் ஆட்டத்தை அதிகரித்து, சமநிலை கோலைப் பதிவு செய்தது. தொடர்ந்து கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி வெற்றி கோலையும் அடித்த இங்கிலாந்து, 2-1 என்ற கணக்கில் வெற்றியை உறுதி செய்தது.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *