தவெகவில் இணையும் செங்கோட்டையன்!

top-news
FREE WEBSITE AD

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் அவரது ஆதரவாளர்களும், விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது.

அதிமுக வலிமை பெற சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று, கடந்தசெப்டம்பர் 5ஆம் தேதி, போர்க்கொடி உயர்த்தினார் செங்கோட்டையன். இதனால் அவர் அதிமுகவில் இருந்தே நீக்கப்பட்டார். அதன் பிறகும் செங்கோட்டையன் மேற்கொண்ட தொடர் முயற்சிகள் பலனளிக்காத நிலையில், அவர் விஜயின் கட்சியில் இணைய உள்ளதாகத் தகவல்கள் பரவின. தற்போது இந்தத் தகவல் உறுதியாகியுள்ளது.

செங்கோட்டையனும், முன்னாள் எம்.பி சத்யபாமா அவரது ஆதரவாளர்களும், வரும் 27ஆம் தேதி, விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைகின்றனர். தமிழக அரசியலில் நீண்ட அனுபவம் கொண்ட செங்கோட்டையனுக்கு, தவெகவில் அமைப்பு ரீதியான பணிகளில் மாநிலஅளவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படஉள்ளதாக சொல்லப்படுகிறது.

ஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரால்டு, புதுச்சேரி பாஜக முன்னாள் எம்எல்ஏ சாமிநாதன், காரைக்கால் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆகியோரும் தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைகின்றனர்.

அதிமுகவை ஒருங்கிணைக்காவிட்டால் புதிய கட்சி தொடங்குவேன் என்று ஓ.பன்னீர்செல்வம் சமிக்ஞை கொடுத்துள்ள நிலையில், இதுநாள் வரையில் அவருடன் இணைந்து செயல்பட்டு வந்த செங்கோட்டையன் தவெகவில் இணையவிருப்பதாக செய்தி வெளியாகியிருப்பது அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்திருக்கிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *