ஆண்கள் டீம் உங்க எலிமினேஷனுக்கு காரணமில்லை,ஒருமையில் பேச வேண்டாம்!பிக்பாஸ்!
- Muthu Kumar
- 21 Oct, 2024
அக்டோபர் 6ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் 8வது சீசன் இப்போது தான் மெல்ல சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கிறது.இந்த நிலையில் இரண்டாவது வார எலிமினேஷனில் அர்னவ் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இரண்டாவது வார எலிமினேஷனில் தர்ஷா குப்தா மற்றும் அர்னவ் இடையே போட்டியிருந்த நிலையில், அர்னவ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். அர்னவ் எலிமினேஷன் என விஜய் சேதுபதி அறிவித்ததும் சக போட்டியாளரான அன்ஷிதா கதறி அழ தொடங்கினார். தொடர்ந்து அர்னவ்வை கட்டிப்பிடித்து நீண்ட நேரம் கண்ணீர் விட்டார். மேலும் அர்னவ் அதிகம் கோபமாக பிக் பாஸ் டிராபியை உடைத்துவிட்டு வெளியே செல்ல, அன்ஷிதா இன்னும் அதிகம் அழ தொடங்கினார்.
மேலும் அவர் வெளியேறியதும், "அர்னவ் எவ்வளவு வலியை பார்த்தவன் தெரியுமா?" என்கிற ரீதியில் பேசிய அன்ஷிதாவை அங்கிருந்தவர்கள் சமாதானப்படுத்தினர்.பிக் பாஸ் வீட்டை இருந்து வெளியேறி அர்னவ், விஜய் சேதுபதியை சந்தித்து பேசினார். அப்போது, "பெண்கள் சிறப்பாக விளையாடுகிறார்கள். ஆனால், ஆண்கள் குரூப்பாக சேர்ந்து கொண்டு ஜால்ரா அடிக்கிறார்கள்." என்று கூறிய அர்னவ் ஒருகட்டத்தில், "டேய் ஜால்ராஸ், நீங்க எல்லாம் பிக் பாஸ் வீட்டுக்கு எதுக்குடா வந்தீங்க. என்னடா பண்ணிட்டு இருக்கீங்க. அப்படியே டீம் சேர்ந்து என்னை ஒதுக்கிட்டீங்க" என்று சக போட்டியாளர்களை ஒருமையில் பேச ஆரம்பித்தார்.
வன்மத்தை கக்கும் ரீதியில் பேசியதால், கடுப்பான விஜய் சேதுபதி, "இது அநாகரிக பேச்சு. உங்க வன்மத்தை கக்காதீங்க. இப்படி எல்லாம் பேச கூடாது. இப்படி பேசுறதா இருந்தா உள்ள இருக்கும்போதே பேசியிருக்கணும்" என்று அர்னவை எச்சரிக்கை செய்தார்.
மேலும், "ஆண்கள் டீம் உங்க எலிமினேஷனுக்கு காரணம் இல்லை. உங்களை நாமினேட் செய்தது பெண்கள் டீம். ஓட்டு போட்டது வெளியில் இருக்கும் மக்கள். அதனால் நீங்கள் வெளியில் வர ஆண்கள் டீம் எந்த விதத்திலும் காரணம் இல்லை" என்று நோஸ்கட் கொடுத்து அர்னவை அனுப்பிவைத்தார். கடைசியில் அவமானத்தோடு பிக் பாஸ் வீட்டில் இருந்து அர்னவ் வெளியேறி உள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *