கெந்திங் RM 1.7 மில்லியன் ரிங்கிட் நகை கொள்ளை விவகாரம்... காவல்துறை தீவிர தேடுதல் வேட்டை
- Shan Siva
- 20 Aug, 2026
குவந்தான், ஆக 20: கடந்த, ஆகஸ்ட் 17 ஆம் தேதி , பெந்தோங், கெந்திங்
ஹைலேண்ட்ஸ், ஸ்கை அவென்யூவில்
உள்ள ஒரு நகைக்கடையைக் கொள்ளையடித்துவிட்டு, 1.7 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள நகைகளுடன் தப்பிச் சென்ற
முகமூடி அணிந்த மூன்று நபர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், அந்த மூவர் குறித்த விவரங்களை காவல்துறை இன்னும் சேகரித்து
வருவதாக பகாங் காவல்துறையின்
தற்காலிகத் தலைவர் டத்தோ அஸ்ரி அக்மர் அயோப் கூறினார்.
219வது காவலர்
தினம் மற்றும் தேசிய தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, ஈப்போ சூப்பர்பைக் கிளப்புடன் இணைந்து நடத்தப்பட்ட
சக்திவாய்ந்த மோட்டார் சைக்கிள் தொண்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு அவர் செய்தியாளர்களிடம்
இதனைத் தெரிவித்தார்.
காலை 11.40
மணிக்கு நடந்த இந்தச் சம்பவத்தில், சந்தேக நபர்கள்
காட்சிப் பெட்டிகளை உடைத்துத் திறந்து, 2.5 கிலோ எடையுள்ள 81 நகைகளுடன் தப்பிச் சென்றனர்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



