சூப்பர் லீக் பருவத்தில் கோலாலம்பூர் சிட்டி எஃப்சியை வீழ்த்திய பேராக் எஃப்சி !

top-news

கோலாலம்பூர், செப். 23-
நேற்று முன்தினம் ஈப்போவிலுள்ள பேராக் ஸ்டேடியத்தில் கோலாலம்பூர் சிட்டி எஃப்சியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சூப்பர் லீக் பருவத்தில் பேராக் எஃப்சி தனது முதல் வெற்றியை உறுதி செய்தது.

முதல் பாதியில் கோல் எதுவுமின்றி முடிந்த ஆட்டம், இரண்டாவது பாதியில் லுகா மிலுனோவிச் அடித்த ஒரு கோலால் ஆட்டம் 1-0 என்ற கோல் கணக்கில் முடிந்தது.இந்த வெற்றியின் வழி பேராக் அணி ஒன்பது போட்டிகளில் 12 புள்ளிகளைப் பெற்று ஏழாவது இடத்தில் உள்ளது.

மற்றுமொரு ஆட்டத்தில், செலாயாங் முனிசிபல் கவுன்சில் ஸ்டேடியத்தில் சபா எஃப்சியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சூப்பர் லீக்கில் நான்காவது வெற்றியை பிடிஆர்எம் அணி கொண்டாடியது.

கோல்கள் இல்லாத முதல் பாதிக்குப் பிறகு, 80ஆவது நிமிடத்தில் பிடிஆர்எம் அணியின் இறக்குமதி ஆட்டக்காரர் இஃபெடாயோ ஒலுசெகுன் மூலம் ஒரு கோல் அடிக்கப்பட்டது.பிடிஆர்எம் அணி இப்போது பத்து போட்டிகளில் 14 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது.



https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *