பெரிக்காத்தான் நேஷனல் பதிவு ரத்து! - ROS அதிரடி

top-news

கோலாலம்பூர், அக் 20: சங்கங்களின் பதிவிலாகாவான  RoS, பெரிகாத்தான் நேஷனல் (PN) கூட்டணியின் பதிவை ரத்து செய்துள்ளது. 

இந்தக் கூட்டணிக்கு வழங்கப்பட்ட 'காரணம் கோரும் அறிவிப்புக்கு' அவர்கள் அளித்த பதில், கூட்டணியின் பதிவைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதற்கான போதுமான நியாயத்தை வழங்கவில்லை என்று ROS தெரிவித்துள்ளது!

இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், செப்டம்பர் 22 தேதியிட்ட 'காரணம் கோரும் அறிவிப்பு' மூலம்,  எழுப்பப்பட்ட விவகாரங்கள் குறித்து விளக்கம் மற்றும் கருத்துகளைச் சமர்ப்பிக்குமாறு PN கூட்டணியிடம் கேட்கப்பட்டதாக RoS குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து ஆவணங்கள் மற்றும் விளக்கங்களை ஆய்வு செய்ததில், வழங்கப்பட்ட காரணங்கள் பதிவை ரத்து செய்வதற்கான அடிப்படையான காரணங்களை மறுக்கவில்லை என்றும், கூட்டணியின் பதிவைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதற்கான வலுவான நியாயத்தை வழங்கவில்லை என்றும் RoS கண்டறிந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *