பெர்சாத்து இன்னும் பெரிகாத்தானில்தான் உள்ளது! - பெரிகாத்தான் நேஷனல் தலைவர் சம்சுரி

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக 10: பெர்சாத்து கட்சி தானாகவே பெரிகாத்தான் நேஷனல் உறுப்பினர் தகுதியை இழந்துவிட்டது என்ற பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கின் கூற்றினை, பெரிகாத்தான் நேஷனல் தலைவர் அஹ்மத் சம்சுரி மொக்தார் நிராகரித்துள்ளார். பெர்சாத்து கட்சி இன்னும் கூட்டணியின் ஓர் அங்கமாகவே உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

நெகிரி செம்பிலான் தேர்தலைத் தொடர்ந்து ஒரு புதிய கூட்டணியை அமைக்கும் தனது நோக்கத்தை பெர்சாத்து கட்சி தெரிவித்ததால், அதன் உறுப்பினர் தகுதி குறித்த சந்தேகங்கள் எழுந்த நிலையில், கூட்டணியில் அதன் நிலை மாறாமல் உள்ளது என்று சம்சுரி கூறினார்.

இன்றுவரை, பெர்சாத்து இன்னும் பெரிகாத்தான் நேஷனல் உறுப்பினராகவே உள்ளது என்று சம்சுரி கூறியதாக உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது.

பெரிகாத்தான் அரசியலமைப்பின்படி, வேறு கூட்டணியில் சேரவோ அல்லது புதிய கூட்டணியை உருவாக்கவோ விரும்பும் எந்தவொரு கட்சியும் தானாகவே தனது உறுப்பினர் தகுதியை இழந்துவிடும் என்பதால், பெர்சாத்து இனி பெரிகாத்தான் நேஷனலின் ஓர் அங்கமாக இல்லை என்று கடந்த வெள்ளிக்கிழமை ஹாடி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *