உறவுகள் மோசமானதற்கு பெர்சாத்துவே காரணம்! - ஹாடி அவாங்
- Shan Siva
- 18 Jul, 2026
கோலாலம்பூர், ஜூலை 18: பாஸ் கட்சியின் தலைமையின் கீழ் பெரிகாத்தான் நேஷனல் கூட்டணி "நச்சுத்தன்மை" வாய்ந்ததாக மாறி, அதன் போராட்டத்திலிருந்து விலகிவிட்டது என்ற முகைதீன் யாசினின் கூற்றை பாஸ் தலைவர் ஹாடி அவாங் நிராகரித்துள்ளார்.
மாறாக, இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்ததற்கு பெர்சாத்து கட்சியே காரணம் என்று ஹாடி குற்றம் சாட்டினார்.
அது உண்மையல்ல. பிஎன்-க்குள் பெர்சாத்துவின் முறைகேடுகளால்தான் இந்தப் பிளவு ஏற்பட்டது என்று செர்டிங், பாலோங், ஜெராம் படாங் மற்றும் பஹாவ் மாநிலத் தொகுதிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் செயல்பாட்டின் போது, ஜெம்போல் மாவட்ட நிர்வாக வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
நேற்று, பெர்சாத்து கட்சியை ஓரங்கட்டும் முயற்சியில், பாஸ் கட்சி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அதன் தலைவர்களுக்கு எதிராக அவதூறான கூற்றுகளைப் பரப்பி வருவதாக முகைதீன் குற்றம் சாட்டினார்.
நெகிரி செம்பிலான் தேர்தல்களுக்காக பாரிசான் நேஷனல் மற்றும் பெரிகாத்தான் இடையே உள்ள புரிந்துணர்வு குறித்துக் கேட்டபோது, பாஸ் கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள் இந்த ஏற்பாட்டிற்கு சாதகமாகப் பதிலளித்துள்ளனர் என்றும், நாடு தழுவிய ஒத்துழைப்பை விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஹாடி கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



