ஒருபுறம் பாலைவனம், மறுபுறம் மழைக்காடு - ஆஸ்திரேலியாவின் மர்மம்!

top-news
FREE WEBSITE AD

ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொரு விதமான காலநிலைகளையும் ஒரு குறிப்பிட்ட விதமான நிலப்பரப்பையும் கொண்டுள்ளன. ஆனால் சில நாடுகள் இதில் விதி விலக்காக உள்ளது.
ஒரே நாட்டில் சில நூறு கிலோ மீட்டர் தொலையில் பாலைவனத்தையும் பசுமையான காட்டினையும் பார்க்க முடியும். கேட்கவே ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா. அது எந்த நாடு என்பது குறித்து நம் சிந்தனைப் பூங்காவில் பார்க்கலாம்.

ஆஸ்திரேலியாவில் பூமியின் வறண்ட பாலைவனமும் உலகின் பழமையான மழைக்காடுகளும் உள்ளன. நாட்டின் மையப் பகுதி மழைப்பொழிவைக் கட்டுப்படுத்தும் உயர் அழுத்த மண்டலங்களின் கீழ் அமைந்துள்ளது. இதனால் பாலைவனங்கள் உருவாகின்றன. அதே நேரத்தில் பசிபிக் பெருங்கடலில் இருந்து வரும் ஈரப்பதமான காற்று மழைக்காடுகளை உருவாக்கியுள்ளன.

ஆஸ்திரேலியாவின் உட்புறப் பகுதிகளில் பெரும்பாலானவை வறண்ட மற்றும் பாதி வறண்ட பாலைவனங்களாக உள்ளன. கிரேட் விக்டோரியா பாலைவனம், கிரேட் சாண்டி பாலைவனம், சிம்ப்சன் பாலைவனம் மற்றும் தனாமி பாலைவனம் போன்ற பகுதிகள் மிகக் குறைந்த மழைப்பொழிவைப் பெறும் பாலை வனங்களாகும்.

குயின்ஸ்லாந்து மற்றும் வடக்கு நியூ சவுத் வேல்ஸ் போன்ற பகுதிகள் அடர்ந்த வெப்பமண்டல மழைக்காடுகளின் தாயகமாக உள்ளது. இவை அதிக மழைப்பொழிவைப் பெறுவது மட்டுமல்லாமல் வளமான பல்லுயிர் பெருக்கத்தை ஆதரிக்கின்றன. டெய்ன்ட்ரீ மழைக்காடு 180 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலானது என்று நம்பப்படுகிறது. இது உலகின் பழமையான மழைக்காடுகளில் ஒன்றாகும், மேலும் அரிய தாவரங்கள், பூச்சிகள், பறவைகள் மற்றும் விலங்குகளின் தாயகமாகும்.

பாலைவனங்களும் மழைக்காடுகளும் மட்டுமல்லாமல், ஆஸ்திரேலியாவின் நிலப்பரப்பில் சவன்னாக்கள், மலைத்தொடர்கள், ஈரநிலங்கள், ஆறுகள், கடற்கரைகள் மற்றும் பவளப்பாறைகள் உள்ளன. உலகின் மிகப்பெரிய பவளப்பாறை அமைப்பான கிரேட் பேரியர் ரீஃப், வெப்பமண்டல மழைக்காடுகளுக்கு அருகில் உள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *