10வது முறையாக உலக சாதனை படைத்தார் சுவீடனின் அர்மாண்ட் டுப்ளான்டிஸ்!

top-news

போலந்தில் டையமண்ட் லீக் தடகளம் நடந்து முடிந்தன. இதில் ஆண்களுக்கான 'போல் வால்ட்' போட்டியில் சுவீடனின் அர்மாண்ட் டுப்ளான்டிஸ் பங்கேற்றார். அதிகபடியாக  6.26 மீ., உயரம் தாவிய இவர், தனது சொந்த உலக சாதனையை முறியடித்தார். சமீபத்தில் முடிந்த பாரிஸ் ஒலிம்பிக் 2024 ல் 6.25 மீ., உயரம் தாவிய இவர், உலக சாதனையுடன் தங்கம் வென்றார். தற்போது 10வது முறையாக உலக சாதனை படைத்துள்ளார்.

 ஆண்களுக்கான 3000 மீ ஓட்டப்பந்தயத்தில் நார்வேயின் ஜேக்கப் பங்கேற்றார். இந்த இலக்கை 7 நிமிடம், 17.55 வினாடியில் கடந்த இவர், உலக சாதனையுடன் முதலிடத்தை பிடித்தார். இதற்கு முன் 1996 ஆம் ஆண்டு கென்யாவின் டேனியல் கோமன், பந்தய துாரத்தை 7 நிமிடம் 20.67 வினாடியில் கடந்தது உலக சாதனையாக இருந்தது.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *