அமைச்சர் பதவியிலிருந்து விலகுவது பொருத்தமற்றது! - முகமட் ஹசான்
- Shan Siva
- 12 Nov, 2026
கோலாலம்பூர், நவ 12: அந்தோணி லோக் போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து விலகியிருப்பது, மாமன்னரின் அரசியலமைப்பு அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்குவதாகப் பார்க்கப்படலாம் என்று அம்னோ துணைத் தலைவரும் தேசிய முன்னணியின் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ முகமட் ஹசான் தெரிவித்துள்ளார்.
நஜிப் ரசாக்குக்கு வழங்கப்பட்ட அரச மன்னிப்பை எதிர்த்து அமைச்சர் பதவியிலிருந்து விலகுவது பொருத்தமற்றது என்று அவர் குறிப்பிட்டார்.
மன்னிப்பு வழங்கும் அதிகாரம் மாமன்னருக்கும் மாநில ஆட்சியாளர்களுக்கும் அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதனை அனைவரும் மதிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

