2026 உலகக் கோப்பைக்கான அர்ஜெண்டினா அணியில் மெஸ்ஸி தலைமையில் இளம் வீரர்கள்!
- Muthu Kumar
- 20 Aug, 2025
போனஸ் அயர்ஸ், ஆக. 20-
2026 உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்று ஆட்டங்களில் வெனிசுலா, ஈக்வடோரை எதிர்கொள்ள, அர்ஜெண்டினா தேசிய கால்பந்து அணி நேற்று 31 வீரர்கள் கொண்ட புதிய பட்டியலை அறிவித்தது.அணியை கேப்டன் லியோனல் மெஸ்ஸி தலைமையேற்று நடத்துகிறார்.
மெஸ்ஸியுடன், இந்த அணியில் மான்செஸ்டர் சிட்டியின் முன்கள வீரர் கிளாடியோ எச்சேவெரி, போர்டோவின் மத்திய கள வீரர் அலன் வரேலா, ரியல் மாட்ரிட் அணியில் புதிதாக இணைந்த இளம் வீரர் பிராங்கோ மாஸ்டான்டுவோனோ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அர்ஜெண்டினாவின் இளம் திறமையாளர்களாக பார்க்கப்படுகின்றனர். மேலும், பிரேசிலின் பால்மெய்ராஸ் அணியைச் சேர்ந்த முன்கள வீரர் ஜோஸ் மானுவல் லோபஸ் முதல் முறையாக அர்ஜெண்டினா அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி, அனுபவமும் திறமையும் கலந்த ஒரு வலுவான அணியை உருவாக்கியுள்ளார். அர்ஜெண்டினா அணி செப்டம்பர் 4 அன்று போனஸ் அயர்ஸில் உள்ள மானுமென்டல் ஸ்டேடியத்தில் வெனிசுலாவை எதிர்கொள்ளவுள்ளது. அதனைத் தொடர்ந்து, ஐந்து நாட்களுக்குப் பிறகு செப்டம்பர் 9 அன்று கயாகுவிலோல் ஈக்வடோருக்கு எதிராக விளையாடவுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



