இன்று முதல் பெட்ரோல், டீசல் விலை குறைகிறது!
- Shan Siva
- 22 Oct, 2026
கோலாலம்பூர், அக் 22: மலேசியாவில் இன்று முதல் ரோன் 97 பெட்ரோல், மானியமில்லா ரோன் 95 பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
ரோன் 97 பெட்ரோல் லிட்டருக்கு 30 சென் குறைந்து 4 ரிங்கிட் 80 சென்னுக்கும், மானியமில்லா ரோன் 95 பெட்ரோல் 30 சென் குறைந்து 4 ரிங்கிட் 32 சென்னுக்கும் விற்பனை செய்யப்படும்.
மானியமில்லா டீசல் விலை 10 சென் குறைந்து லிட்டருக்கு 5 ரிங்கிட் 7 சென்னாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், புடி95 திட்டத்தின் கீழ் ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 சென்னுக்கும், புடி டீசல் திட்டத்தின் கீழ் டீசல் 2 ரிங்கிட் 10 சென்னுக்கும் தொடர்ந்து விற்பனை செய்யப்படும்.
மானிய விலையிலான பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளிலும் மாற்றமில்லை. இந்தப் புதிய விலைகள் அக்டோபர் 28ஆம் தேதி வரை அமலில் இருக்கும்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

