பெட்ரோல் - டீசல் விலை குறைந்தது! நிதி அமைச்சு அறிவிப்பு

top-news

கோலாலம்பூர், ஜூன் 4: தீபகற்ப மலேசியாவில் RON97 பெட்ரோல், மானியமில்லா RON95 மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் இன்று முதல் குறைக்கப்படும் என நிதி அமைச்சகம்  அறிவித்துள்ளது.

RON97 பெட்ரோலின் விலை ஒரு லிட்டருக்கு RM4.65-லிருந்து 30 சென் குறைக்கப்பட்டு RM4.35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே வேளை, மானியமில்லா RON95 பெட்ரோலின் விலை ஒரு லிட்டருக்கு RM3.92-லிருந்து 20 சென் குறைக்கப்பட்டு RM3.72 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தீபகற்ப மலேசியாவில் டீசல் விலையும் ஒரு லிட்டருக்கு RM4.87-லிருந்து 20 சென் குறைக்கப்பட்டு RM4.67 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

BUDI95 திட்டத்தின் கீழ் விற்கப்படும் RON95 பெட்ரோல் ஒரு லிட்டருக்கு RM1.99 என்ற விலையில் தொடர்ந்து விற்கப்படும். அதே சமயம், கிழக்கு மலேசியாவில் டீசல் விலை ஒரு லிட்டருக்கு RM2.15 என்ற அளவில் மாற்றமின்றி உள்ளது.

மானிய பெட்ரோல் கட்டுப்பாட்டு அமைப்பின் (SKPS) கீழ் வழங்கப்படும் மானிய பெட்ரோல் ஒரு லிட்டருக்கு RM2.05 என்ற விலையிலும், மானிய டீசல் கட்டுப்பாட்டு அமைப்பின் (SKDS) கீழ் வழங்கப்படும் மானிய டீசல் ஒரு லிட்டருக்கு RM2.15 என்ற விலையிலும் விற்பனை செய்யப்படும்.

இந்த விலைகள் ஜூன் 10 வரை அமலில் இருக்கும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *