பெட்ரோல் - டீசல் விலை நாளை முதல் குறைகிறது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக 12: RON97 பெட்ரோல், மானியமில்லா RON95 பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் நாளை முதல் குறையும் என நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

RON97 பெட்ரோல் விலை தற்போதுள்ள RM4.35-லிருந்து 20 சென் குறைந்து, ஒரு லிட்டருக்கு RM4.15 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், மானியமில்லா RON95 பெட்ரோல் விலை தற்போதுள்ள RM3.77-லிருந்து 15 சென் குறைந்து, ஒரு லிட்டருக்கு RM3.62 ஆக விற்கப்படும்.

இதற்கிடையில், மானியமில்லா டீசல் விலை தற்போதுள்ள RM4.57-லிருந்து 10 சென் குறைந்து, ஒரு லிட்டருக்கு RM4.47 ஆக விற்கப்படும்.

BUDI95 திட்டத்தின் கீழ் RON95 பெட்ரோல் ஒரு லிட்டருக்கு RM1.99 என்ற விலையில் தொடர்ந்து விற்கப்படும், அதேசமயம் BUDI டீசல் திட்டத்தின் கீழ் டீசல் விலை ஒரு லிட்டருக்கு RM2.10 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 மானிய பெட்ரோல் கட்டுப்பாட்டு அமைப்பின் (SKPS) கீழ் வழங்கப்படும் மானிய பெட்ரோல் ஒரு லிட்டருக்கு RM2.05 என்ற விலையிலும், மானிய டீசல் கட்டுப்பாட்டு அமைப்பின் (SKDS) கீழ் வழங்கப்படும் மானிய டீசல் ஒரு லிட்டருக்கு RM2.15 என்ற விலையிலும் விற்பனை செய்யப்படும்.

இந்த விலைகள் ஆகஸ்ட் 19 வரை அமலில் இருக்கும்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *