பெட்ரோல் - டீசல் விலை இன்று முதல் 5 சென் குறைகிறது

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப் 3: RON97 பெட்ரோல், மானியமில்லா RON95 மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் இன்று முதல் 5 சென் குறையும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

RON97 பெட்ரோல் ஒரு லிட்டர் RM4.25 என்ற விலையிலும், மானியமில்லா RON95 பெட்ரோல் ஒரு லிட்டர் RM3.77 என்ற விலையிலும் விற்கப்படும்.

மானியம்மில்லா டீசல் ஒரு லிட்டர் RM4.67 என்ற விலையில் விற்கப்படும்.

BUDI95 திட்டத்தின் கீழ் RON95 பெட்ரோல் ஒரு லிட்டர் RM1.99 என்ற விலையிலும், BUDI டீசல் திட்டத்தின் கீழ் டீசல் ஒரு லிட்டர் RM2.10 என்ற விலையிலும் தொடர்ந்து விற்கப்படும்.

மானிய பெட்ரோல் கட்டுப்பாட்டு அமைப்பின் (SKPS) கீழ் மானிய விலையில் வழங்கப்படும் பெட்ரோல் ஒரு லிட்டர் RM2.05 என்ற விலையிலும், மானிய டீசல் கட்டுப்பாட்டு அமைப்பின் (SKDS) கீழ் மானிய விலையில் வழங்கப்படும் டீசல் ஒரு லிட்டர் RM2.15 என்ற விலையிலும் விற்கப்படும்.

இந்த விலைகள் செப்டம்பர் 9 வரை அமலில் இருக்கும்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *