ஜெட்ஸ் கிளப்பின் வருடாந்திர 3 கி.மீ.நெடுஞ்சாலை ஓட்டம்!

top-news

கோலாலம்பூர், நவ. 13-

ஜெட்ஸ் கிளப்பின் வருடாந்திர 3 கி.மீ.நெடுஞ்சாலை ஓட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர் ஜாலான் டூத்தாவில் நடைபெற்றது.இப்போட்டியை ஜெட்ஸ் ஒட்டப் பந்தய சங்கத்தின் தலைவர் சிவப்பிரகாசம் சிவசம்பு அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

1947ஆம் ஆண்டு முதல் கடந்த 50 ஆண்டுகளாக இக்கிளப்பின் தலைவராக பணியாற்றி வருவது பெருமைக்குரியது என்று. சங்கத்தின் புரவலர் டத்தோஸ்ரீ புலேந்திரன் தெரிவித்தார்.வெற்றி பெற்றவர்களுக்கு அவர் பரிசுகளை எடுத்து வழங்கினார்.

இதில் ஜெட்ஸ் கிளப்பின் அங்கத்தினர்கள் மலேசியாவைப் பிரதிநிதித்து ஓடினர். 50க்கும் மேற்பட்ட அங்கத்தினர்கள் கலந்து கொண்டனர்.போட்டியில் யூகன் தனபாலன் குழுக்கள் முதலாவதாகவும் சங்கர் ராஜன் குழுக்கள் இரண்டாவதாகவும் சுப்பிரமணியம் - கிருஷ்ணசாமி குழுக்கள் மூன்றாவதாகவும் வெற்றி பெற்றனர்.கிளப்பின் செயலாளர் கலைவல்லி ரெத்தினம் நன்றி உரையாற்றினார்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *