தந்தையின் தியாகத்தை உணர்வோம்!
- Shan Siva
- 16 Jun, 2024
கோலாலம்பூர், ஜூன் 16: தந்தையர் தினத்தை இன்று சிறப்பாகக் கொண்டாடும் அனைவருக்கும்
தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாக, மலேசிய
அரிமா சங்கத்தின் தோற்றுநரும், ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவருமான
ஓம்ஸ் பா.தியாகராஜன் மற்றும் அவர்தம் புதல்வரும் மலர் டிவியின் தலைமை நிர்வாகியுமான
டாக்டர் பழனீஸ்வரன் தியாகராஜன் ஆகியோர் தங்கள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளனர்.
தங்கள் குழந்தைகளுக்காகத் தங்கள்
வாழ்வையே அர்ப்பணித்து அயராது உழைத்துக்கொண்டிருக்கும் அனைத்து தந்தைமார்களுக்கும்
வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் மகன் – மகள்களும் தந்தையின் தியாகத்தை உணர்ந்து, தந்தையைப் போற்றி பண்புள்ளவர்களாய் விளங்கிட வேண்டும் என்றும் இறைவனைப் பிரார்த்திப்பதாக
தங்கள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *