செனாய் விமான நிலையம் அருகே ஆடவர் ஒருவரைத் தாக்கிய எழுவர் கைது!

top-news
FREE WEBSITE AD

ஜொகூர், அக் 8: செனாய் சர்வதேச விமான நிலையம் அருகே ஒரு நபர் தாக்கப்பட்டதைக் காட்டும் வைரலான வீடியோவுடன் தொடர்புடைய ஏழு பேரை ஜொகூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று இரவு 8 மணி முதல் இன்று அதிகாலை 12.30 மணி வரை Skudai மற்றும் Johor Bahru ஆகிய இடங்களில் 25 மற்றும் 40 வயதுடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் Tan Seng Lee தெரிவித்தார்.

நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள பெட்ரோல் நிலையத்திற்கு முன்பாக இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக அவர் கூறினார்.

‘திஸ் இஸ் ஜொகூர்’ என்ற முகநூல் கணக்கின் மூலம் பதிவேற்றப்பட்ட வீடியோவை அடையாளம் கண்டு சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ததாக அவர் கூறினார்.

பாதிக்கப்பட்ட உள்ளூர் நபரான 39 வயதுடைய நபரிடமிருந்தும் போலீஸ் அறிக்கையைப் பெற்றதாக அவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவருக்கு கீறல்கள் மற்றும் வீக்கம் உட்பட சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் இரண்டு கார்கள், நான்கு கைத்தொலைபேசிகள் மற்றும் இரண்டு பிரம்பு குச்சிகளையும் போலீஸார் கைப்பற்றியதாக டான் கூறினார்.

சந்தேக நபர்களில் நான்கு பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றங்களுக்கான குற்றப் பதிவுகளை கொண்டுள்ளனர் என்று குறிப்பிட்ட அவர், அக்டோபர் 11ம் தேதி வரை அவர்கள் காவலில் வைக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டவருக்கும் இன்னும் தலைமறைவாக உள்ள மற்றொரு சந்தேக நபருக்கும் இடையிலான தவறான புரிதலால் இந்த சம்பவம் தூண்டப்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்று டான் கூறினார்!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *