வட கிழக்கு பருவமழை காலகட்டத்தில் மிக எச்சரிக்கையுடன் இருங்கள்-துணைப் பிரதமர்!
- Muthu Kumar
- 16 Nov, 2024
புத்ராஜெயா, நவ. 16-
இம்மாதம் 19 முதல் 23ஆம் தேதிக்கிடையில் நாட்டில் ஏற்படக் கூடிய வட கிழக்கு பருவமழை காலகட்டத்தில் மிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு, துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி நாட்டு மக்களுக்கு நினைவுறுத்தி இருக்கின்றார்.
இக்காலகட்டத்தில் ஜொகூர், பகாங், கிளந்தான் மற்றும் திரெங்கானு ஆகிய தீபகற்ப மலேசிய மாநிலங்கள் உட்பட கிழக்கு சபாவில் தொடர்ச்சியான கன மழை பெய்யும் ஆபத்து இருப்பதாக, மலேசிய வானிலை ஆய்வு இலாகாவின் (மெட்மலேசியா) கணிப்பை மேற்கோள்காட்டி ஸாஹிட் தெரிவித்துள்ளார்.
“இக்காலகட்டத்தில், தென் சீனக் கடலில் பலத்த காற்று வீசும் என்பதுடன் கடலில் கொந்தளிப்பு ஏற்படும். அதனால், பருவமழை குறித்த ஆகக் கடைசியான உண்மையான தகவல்களை பெற்று விழிப்புடன் இருக்குமாறு நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் அறிவுறுத்துகிறேன்” என்று, எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர் மழை எச்சரிக்கையை விடுத்து வரும் மெட்மலேசியா, இம்மாதம் 19 முதல் 23ஆம் தேதி வரையில் ஜொகூர், பகாங், கிளந்தான் மற்றும் திரெங்கானுவில் தொடர் மழை பெய்யும் என்று கணித்திருக்கிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *