ஜூலை 1 முதல் போக்குவரத்துக் குற்றங்களுக்கு புதிய Compound கட்டணம்!
- Shan Siva
- 29 Jun, 2024
கோலாலம்பூர், ஜூன் 29: கோலாலம்பூர் நகராண்மைக் கழகமான டிபிகேஎல், வரும் திங்கள்கிழமை ஜூலை 1-ஆம் தேதி
முதல் சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 மற்றும் அதன் துணைச் சட்டத்தின் கீழ்
போக்குவரத்துக் குற்றங்களுக்கான புதிய compound கட்டணம் எனப்படும்
கூட்டுக் கட்டணங்களை அமல்படுத்துகிறது.
மோட்டார் சைக்கிள் வகைக்கான compound கட்டணங்கள் ஒன்று முதல் 15 நாட்களுக்குள் செலுத்துபவர்களுக்கு
30 வெள்ளியும், 16 முதல் 30 நாட்களுக்குள் செலுத்துபவர்களுக்கு
50 வெள்ளியும் மற்றும் 31
முதல் 60 நாட்களுக்கு 80 வெள்ளியையும் DBKL நிர்ணயித்துள்ளது.
கார் குற்றங்களுக்கு, ஒன்று முதல் 15 நாட்களுக்குள் செலுத்தப்படும் தொகைகளுக்கு 50
வெள்ளி,
16 முதல் 30 நாட்களுக்கு 80 வெள்ளி, மற்றும் 31 முதல் 60 நாள்களுக்கு 100 வெள்ளி என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கனரக வாகனங்களுக்கு, ஒன்று முதல் 15 நாட்களுக்குள் செலுத்தப்படும் தொகைகளுக்கு 200 வெள்ளியும்,16 முதல் 30 நாட்களுக்கு 250 வெள்ளியும். 31 முதல் 60 நாட்களுக்கு
300 வெள்ளியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *