விஜய் நடிக்கும் கோட் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

top-news
FREE WEBSITE AD

விஜய் நடிப்பில் வெளியாகவிற்கும் கோட் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் பல மடங்காக அதிகரித்துள்ளது.

இதற்கு காரணம், இயக்குனர் வெங்கட் பிரபு சமீபத்தில் ஒரு பிரபல பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டி தான். கோட் படத்தில் இருந்து வெளியான ஸ்பார்க் மற்றும் விசில் போடு ஆகிய பாடல்கள் விமர்சனத்தை தான் அதிகம் சந்தித்திருந்தது.

இதன் காரணமாக படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பல மடங்கு குறைந்து போக, விஜய் சினிமா பயணத்தை முடிவு செய்யும் நேரத்தில் இப்படியான பாடல்கள் தான் வெளியாக வேண்டுமா என்றும் ரசிகர்கள் மனமுடைந்து போயினர். அப்படி ஒரு சூழலில் இந்த விமர்சனத்தை கவனித்த வெங்கட் பிரபு, பாடல்களை முதலில் விரும்பாத பலரும் தற்போது விருப்பத்துடன் கேட்டு வருவதாகவும் படம் ரிலீசான பின்னர் திரை அரங்கில் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இதே போல கடந்த சில தினங்களாகவே கோட் படத்தின் ட்ரைலர் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்து வந்த படக்குழு அதனையும் தாமதம் செய்து கொண்டே வருகிறது. படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கடந்த 3 நாட்களாக ட்ரைலர் அப்டேட் தருவதாக கூறி அது பற்றி எதையும் தெரிவிக்காமலே இருந்து வருகிறார்.

ஆனால், இன்னொரு பக்கம் ஆகஸ்ட் 17 ஆம் தேதி கோட் படத்தின் ட்ரைலர் வெளியாகும் என்ற தகவலும் இணையத்தில் வைரலாகி வருகிறது. எதுவாக இருந்தாலும், இன்று நிச்சயம் கோட் படத்தின் ட்ரைலர் குறித்த அப்டேட் அதிகாரபூர்வமாக வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒரு சூழலில், சமீபத்தில் வெளியான கோட் படத்தின் அட்டகாசமான போஸ்டர் ஒன்று பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை அள்ளி வருகிறது.

இதுவரையிலும் விஜய், பிரபு தேவா, பிரசாந்த், ஸ்னேகா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டோரின் புகைப்படங்கள் மட்டுமே வெளியாகி வர இந்த புதிய போஸ்டரில் அனைவரும் இடம்பெற்றுள்ளனர். பிரேம்ஜி, மைக் மோகன், லைலா, ஜெயராம், வைபவ், யோகி பாபு என அனைவருமே உள்ளனர். மேலும் படத்தில் வரும் ஒவ்வொருவரின் தோற்றமும் அட்டகாசமாக இருக்க, அதிலும் வில்லத்தனமான மைக் மோகனின் லுக் 90ஸ் கிட்ஸ் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது.

இதனிடையே, இந்த புதிய போஸ்டரில் பிரேம்ஜி லுக்கில் இருக்கும் ஒரு ரகசியம் அதிகம் பேசுபொருளாக மாறி உள்ளது. கோட் படத்தின் ஷூட்டிங் கேரளாவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வந்தது. அப்போது சிஎஸ்கே ஐபிஎல் மேட்ச் நடப்பது போன்ற காட்சி எடுக்கப்படுவதாக தகவல் வெளியாக, அந்த போட்டிக்கு நடுவே தான் கோட் படத்தின் க்ளைமாக்ஸ் என்றும் ஒரு தகவல் வெளியானது.

அப்படி இருக்கையில் தான், இந்த போஸ்டரிலும் பிரேம்ஜி அதிர்ச்சியான லுக்கில் இருக்க, அவரது தலையில் சிஎஸ்கேவின் தொப்பியும் உள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *