FIFA உற்சாகம் - உணவகத்தில் சண்டை! - ஜொகூரில் 12 பேர் கைது

top-news

கோலாலம்பூர், ஜூலை 20: உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறு தொடர்பாக ஜொகூர் பாரு, தாமான் டயாவில் உள்ள ஓர் உணவகத்தில் இன்று அதிகாலை 15 வயது சிறுவன் உட்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

சம்பவம் குறித்து போலீஸாருக்கு அதிகாலை 5.40 மணிக்குத் தகவல் கிடைத்ததாகவும், காலை 10 மணி முதல் 11 மணிக்குள் சந்தேக நபர்களை கைது செய்ததாகவும் ஜொகூர் காவல்துறைத் தலைவர் அப் ரஹ்மான் அர்சாத்கூறினார்.

சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே தாமான் செத்தியா இண்டா பகுதியைச் சுற்றி சந்தேக நபர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களில் மூன்று பேர் குற்றப் பதிவுகள் வைத்திருப்பது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஸ்பெயினுக்கும் அர்ஜென்டினாவுக்கும் இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டி திரையிடலின் போது தொடங்கியதாக நம்பப்படும் சண்டை தொடர்பான இரண்டு நிமிடம், 36 வினாடிகள் கொண்ட வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *