உக்ரைனில் ரஷியா நடத்திய தாக்குதலில் இந்திய தொழிலதிபருக்கு சொந்தமான எஃகு ஆலை சேதம்

top-news
FREE WEBSITE AD

கீவ்: உக்ரைனில் ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இந்திய தொழிலதிபர் லட்சுமி மிட்டலுக்குச் சொந்தமான ஆர்சலர் மிட்டல் கிரிவி ரிஹ் எஃகு ஆலை கடுமையாகச் சேதமடைந்தது. இந்தத் தாக்குதலில் 2 பேர் உயிரிழந்ததுடன், 14 பேர் காயமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் சொந்த நகரமான கிரிவி ரிஹில் அமைந்துள்ள இந்த ஆலை, அந்நாட்டின் மிகப்பெரிய எஃகு உற்பத்தி நிலையங்களில் ஒன்றாகும்.

ரஷியாவின் ஏவுகணைத் தாக்குதலில் ஆலையின் மின்சார உற்பத்தி மற்றும் குண்டு உலைப் பிரிவுகள் உள்ளிட்ட முக்கிய உற்பத்தி கட்டமைப்புகள் சேதமடைந்ததாக ஆர்சலர் மிட்டல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஆலையின் உற்பத்தி நடவடிக்கைகள் ஓரளவு நிறுத்தப்பட்டுள்ளன.

தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ள நிலையில், ஆலையின் சேதம் காரணமாக உற்பத்தி பணிகளில் ஏற்பட்ட பாதிப்பை சீரமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *