Faisal மீண்டு வர வேண்டும்! - Hannah Yeoh

top-news

Acid வீச்சு தாக்குதலுக்குள்ளான Selangor FC கால்பந்து விளையாட்டு வீரர் , Faisal Halim மீண்டு வர இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை உறுதுணையாக இருக்கும் என அதன் அமைச்சர் Hannah Yeoh உறுதியளித்தார். 27 வயதே ஆன Faisal Halim கால்பந்தாட்டத்தில் மேலும் சாதனைகள் புரிய அவர் மீண்டு வரவேண்டும் என்றும், அவருடைய ரசிகர்களில் ஒருவராகத் தாமும் வேண்டுவதாக Hannah Yeoh  தெரிவித்துள்ளார். அவரின் நிலையில் யாராக இருந்தாலும் பழிவாங்கும் நோக்கத்துடன்  கருத்துகள் வெளியிட்டு இருப்பர்.

ஆனால் பக்குவமாகத் தன் தரப்பு விளக்கத்தையும் காவல் துறையின் விசாரணைக்கும் முழுமையாக அவர் ஒத்துழைப்பு வழங்கியிருப்பது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. விளையாட்டாளர்களுக்கானப் பாதுகாப்புகள் குறித்து இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு மேலும் அக்கறையுடன் இருக்கவிருப்பதாக Hannah Yeoh  தெரிவித்தார்

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *