கமலா ஹாரிஸ் அதிபரானால், இஸ்ரேலே இருக்காது! நேருக்கு நேர் விவாதத்தில் டிரம்ப் அதிரடி!

top-news

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களான கமலா ஹாரிஸ் - டொனால்ட் டிரம்ப் இடையிலான நேருக்கு நேர் விவாதம் இன்றி பரபரப்பாக நடைபெற்றது. அமெரிக்காவின் பிலடெல்பியாவில் ஏபிசி ஊடகம் இந்த விவாதத்தை நடத்தியது.

வரும், நவம்பர் 5-ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்கப் போகும் மக்கள் மனதில். இருவருக்குமான இவ்விவாதம் அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதால் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் இந்நிகழ்ச்சியை உற்றுநோக்கினர்,

இந்நிலையில், காஸாவில் நடைபெற்று வரும் போர் குறித்து கமலா ஹாரிஸிடம் கேட்ட கேள்விக்கு, தன்னைப் பாதுகாத்துக்கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை இருப்பதாகவும் தன்னை அந்நாடு எப்படி பாதுகாக்கிறது என்பது முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார்.

காஸா போரை எப்படி முடிவுக்குக் கொண்டு வருவீர்கள் என்ற கேள்விக்கு டிரம்ப் பதிலளித்தார். தான் அதிபராக இருந்திருந்தால், இந்த போரே தொடங்கியிருக்காது என்று  கூறினார்.

கமலா ஹாரிஸ் இஸ்ரேலை வெறுக்கிறார். அவர் அதிபரானால் இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேல் இருக்காது என்று தாம் கருதுவதாக டிரம்ப் குறிப்பிட்டார்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *