நேபாள பெருவெள்ளம்: உடல்கள் கிடைக்காததால் உருவ பொம்மைகளுக்கு இறுதிச் சடங்கு – நெஞ்சை உருக்கும் சம்பவம்
- Surendran Sumdraraj
- 02 Sep, 2026
காத்மாண்டு, செப். 2 –
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் இன்னும் மீட்கப்படாத நிலையில், அவர்களது குடும்பத்தினர் வைக்கோலால் உருவ பொம்மைகள் செய்து அதற்கு இறுதிச் சடங்குகள் நடத்திய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் 26-ஆம் தேதி திபெத் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவைத் தொடர்ந்து போடேகோஷி ஆற்றில் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக நேபாளத்தின் வடக்கு மற்றும் மத்திய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
பாறைகள், மண் மற்றும் சேற்றுடன் சீறிப்பாய்ந்த வெள்ளத்தில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளும் சிக்கினர். இதுவரை 1,127 பேர் உயிரிழந்துள்ளதுடன், 12 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 4 ஆயிரம் பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.
பெருவெள்ளம் ஏற்பட்டு ஆறு நாட்கள் கடந்துள்ளதால், காணாமல் போனவர்களில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில், காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாத் கோவில் வளாகத்தில், உடல்கள் கிடைக்காதவர்களின் குடும்பத்தினர் இறுதிச் சடங்கு நடத்தினர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



