நாட்டில் சினமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
- Muthu Kumar
- 26 Sep, 2024
கோத்தா கினபாலு, செப். 26-
மலேசியாவை விட்டு சபாவும் சரவாக்கும் வெளியேற வேண்டும் என்று சில தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இதுபோன்ற சினமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சபா அம்னோ கோரிக்கை விடுத்துள்ளது. சமூக ஊடகங்கள் வாயிலாக அந்த தரப்பினர் மேற்கொள்ளும் இந்நடவடிக்கையினால் கலவரம் மூளும் வாய்ப்புள்ளது. எனவே, அதற்கு அதிகாரிகள் உடனடியாக ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று சபா அம்னோவின் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ சுஹைமி நசீர் தெரிவித்தார்.
மேலும், இந்த மாதம் 16ஆம் தேதி மலேசியா தினத்தன்று ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஒரு கம்பத்திலிருந்து மலேசியக் கொடி இறக்கப்பட்டு அதற்குப் பதிலாக சபா, சரவாக் கொடிகள் ஏற்றப்பட்டன. இந்த விவகாரம் குறித்து போலீசார் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் சுஹைமி கேட்டுக் கொண்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *