துல்கர் சல்மான் - பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

top-news
FREE WEBSITE AD

ஹைதராபாத், ஆக. 3-

மலையாள நடிகர் துல்கர் சல்மான் மற்றும் நடிகை பூஜா ஹெக்டே இணைந்து நடிக்கும் புதிய தெலுங்கு திரைப்படமான ‘ஸ்ரீ ஸ்ரீ’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வெளிநாட்டில் நடைபெற்ற முக்கிய படப்பிடிப்பு அட்டவணை வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, படக்குழு மீண்டும் ஹைதராபாத் திரும்பியுள்ளது.

அறிமுக இயக்குனர் ரவி நெலகுட்டி இயக்கும் இந்த திரைப்படத்தில், துல்கர் சல்மானுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், தீக்ஷித் ஷெட்டி மற்றும் ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற நீண்டகால படப்பிடிப்பில் கதையின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *