அஜித்குமார் நடிக்கும் ‘டேர் டெவில்’ படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் தொடக்கம்
- Surendran Sumdraraj
- 05 Oct, 2026
சென்னை, அக். 5 –
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் நடிக்க உள்ள ‘டேர் டெவில்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்பான புதிய தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் தொடங்க உள்ளதாகவும், இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்தப் படம், அஜித்குமாரின் 64-ஆவது திரைப்படமாக உருவாகிறது. முன்னதாக அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் வெளியான ‘குட் பேட் அக்லி’ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இருவரும் மீண்டும் இணைந்திருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘டேர் டெவில்’ படத்தை அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி அஜித்குமார், ‘பிரேவ் ஹார்ட்ஸ் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

