“இது போன்ற படங்கள் தெலுங்கு சினிமாவுக்கு அவசியம்” - சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ படத்தை பாராட்டிய சிரஞ்சீவி

top-news

ஹைதராபாத், ஜூன் 23 –

நடிகை சமந்தா நடித்துள்ள ‘எங்கள் தங்கம்’ (தெலுங்கில் மா இன்டி பங்காரம்) திரைப்படத்தை நடிகர் சிரஞ்சீவி வெகுவாகப் பாராட்டியுள்ளார். பெண்களை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படியான திரைப்படங்கள் தெலுங்கு திரையுலகிற்கு மிகவும் அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

படத்தின் சிறப்பு நிகழ்ச்சியில் பேசிய சிரஞ்சீவி, வணிக ரீதியிலான திரைப்படங்களுக்கு மத்தியில் வலுவான கதைக்களம் மற்றும் பெண் கதாநாயகியை மையமாகக் கொண்ட படங்கள் அதிகரிக்க வேண்டும் என்றும், அந்த வகையில் சமந்தாவின் முயற்சி பாராட்டுக்குரியது என்றும் கூறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் சமந்தா அதிரடி மற்றும் உணர்வுபூர்வமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குடும்ப பின்னணியுடன் கூடிய ஆக்‌ஷன் கதையாக உருவாகியுள்ள படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *