ஜெலுத்தோங் சீனக் கோயிலில் தீ விபத்து

top-news
FREE WEBSITE AD

ஜார்ஜ் டவுன், ஆக 21:
இங்குள்ள ஜெலுத்தோங், லெபு பகாவுவில் உள்ள ஒரு சீனக் கோயிலின் சுமார் 40 சதவீதம் நேற்று பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்தது.
தீ விபத்து குறித்து பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு மாலை 4.28 மணிக்கு அவசர அழைப்பு வந்தது.
சுமார் 50 அடிக்கு 20 அடி பரப்பளவுள்ள பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாக பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி செயல்பாட்டு இயக்குனர் ஜான் சகுன் பிரான்சிஸ்,  கூறினார்.
கோயிலின் சுமார் 40 சதவீதம் தீ விபத்தில் சேதமடைந்துள்ளது. இதுவரை எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை என்று அவர் கூறினார்.
மாலை 4.40 மணிக்கு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
தீ விபத்துக்கான காரணம் மற்றும் மொத்த இழப்புகள் இன்னும் கண்டறியப்படவில்லை.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *