அருண் விஜய் நடிக்கும் ‘இருளன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியீடு
- Surendran Sumdraraj
- 13 Aug, 2026
சென்னை, ஆக. 13-
நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படத்திற்கு ‘இருளன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’, ‘மருது’, ‘விருமன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய முத்தையா, ‘இருளன்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். அருண் விஜய் மற்றும் முத்தையா இணையும் முதல் திரைப்படம் இதுவாகும்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், “இது போர்குடி காவல் இனத்தின் வீர வரலாறு” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் வீரத்தையும் வரலாற்றுப் பின்னணியையும் மையமாகக் கொண்ட கதைக்களம் படத்தில் இடம்பெறலாம் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.
இப்படத்தில் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்த மிர்ணா மேனன், அருண் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் சமுத்திரக்கனி, ஜான் கொக்கேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



