கிருஷ்ணா நடிக்கும் ‘மர்டர் இன் டவுன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

top-news
FREE WEBSITE AD

சென்னை, ஆக. 3-

 நடிகர் கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் 25-ஆவது திரைப்படத்திற்கு ‘மர்டர் இன் டவுன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர்களை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார்.

படத்தில் கிருஷ்ணா, என். அதியமான் என்ற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நரைத்த தலைமுடி, அடர்ந்த மீசை மற்றும் காக்கி சீருடையில் வித்தியாசமான தோற்றத்தில் அவர் இடம்பெற்றுள்ள பர்ஸ்ட் லுக் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கொலை மர்மத்தை மையமாகக் கொண்ட விசாரணை திரில்லர் கதையாக இந்த திரைப்படம் உருவாகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தை பாலகிருஷ்ணன் இயக்குகிறார். கதாநாயகியாக பிந்து மாதவி நடித்துள்ள நிலையில், மேலும் பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர். படத்தின் தொழில்நுட்பக் குழுவினரும் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *