ஹண்டா வைரசை தொடர்ந்து மற்றொரு சொகுசு கப்பலில் நோரா வைரஸ் பரவல்
- Surendran Sumdraraj
- 10 May, 2026
ஹண்டா வைரஸ் பரவல் காரணமாக உலகளவில் அச்சம் நிலவி வரும் நிலையில், தற்போது மற்றொரு சொகுசு கப்பலில் நோரா வைரஸ் பரவியிருப்பது புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற சொகுசு கப்பலில் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தகவலின்படி, கடந்த ஏப்ரல் மாத இறுதியில் போர்ட் எவர்கிளேட்ஸ் பகுதியில் இருந்து பயணம் தொடங்கிய கப்பலில் இருந்த 3,116 பேரில் 102 பயணிகளும், 13 ஊழியர்களும் சேர்த்து மொத்தம் 115 பேருக்கு நோரா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC), நோரா வைரஸ் மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று எச்சரித்துள்ளது. பாதிக்கப்பட்ட நபர்களின் தொடர்பு, கலப்பட உணவு, தண்ணீர் மற்றும் மாசுபட்ட மேற்பரப்புகள் மூலம் இந்த வைரஸ் எளிதில் பரவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலருக்கு வயிற்றுவலி, தலைவலி மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



