நீரில் துர்நாற்றம்; தொழிற்சாலையே காரணம்!

top-news
FREE WEBSITE AD


 

ஷா ஆலம், ஜூலை 24- மறுசுழற்சிப் பணிகளுக்காக அக்ரிலிக் எனப்படும் கண்ணாடி கரிம வேதியல் சேர்மத்தை பதப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிற்சாலை ஒன்றின் டாங்கியில் ஏற்பட்ட கசிவே சிலாங்கூரிலுள்ள சில ஆறுகளில் நீர் துர்நாற்றம் ஏற்பட்டதற்கான காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.


குவாங்கிலுள்ள அந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட மாசுபாடு காரணமாக ரந்தாவ் பாஞ்சாங், சுங்கை சிலாங்கூர் முதல் கட்டம், சுங்கை சிலாங்கூர் இரண்டாம் கட்டம் மற்றும் சுங்கை சிலாங்கூர் மூன்றாம் கட்டம் ஆகிய நான்கு நீர் சுத்திகரிப்பு நிலையங்களை தற்காலிகமாக மூட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதாக அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.


சிலாங்கூர் மாநில சுற்றுச் சூழல் இலாகா மற்றும் செலாயாங்

நகராண்மைக் கழகத்துமன் இணைந்து சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியமான லுவாஸ் மேற்கொண்ட சோதனையில் சம்பந்தப்பட்ட அந்த தொழிற்சாலையிலிருந்து கசிந்த துர்நாற்றமே மாசுபாட்டிற்கு காரணம் என கண்டறியப்பட்டது என்று அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *