தொழிலதிபர் கொலை: நால்வருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

top-news
FREE WEBSITE AD

பத்து பஹாட், ஆக 17:

பாரிட் ராஜா, சுங்கை தஞ்சோங் செம்ப்ராங் பகுதியில் ஆகஸ்ட் 3 அன்று வலையில் சுற்றப்பட்டு மிதந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட தொழிலதிபர் ஒருவரைக் கொலை செய்ததாக நான்கு பேர் மீது இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள்: லாரி ஓட்டுநர் யோகேஸ்வரன் சுப்ரமணியம், 40; லாரி உதவியாளர்கள் லிம் யோங் மிங், 26, மற்றும் அச்சுதன் நாகராஜன், 32; மற்றும் பழைய கார் விற்பனையாளர் ஹவ் ஹான் வெய், 33 ஆகியோர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாஜிஸ்திரேட் முஸ்தகிம் சுகர்னோ முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, அந்த நால்வரும் தலையசைத்தனர்.

கொலை வழக்குகள் உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வருவதால், வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
ஜூலை 29 அன்று பிற்பகல் 2.35 மணிக்கும் ஆகஸ்ட் 3 அன்று பிற்பகல் 12.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில், ஜொகூர் பாரு, தமான் ஸ்ரீ ஸ்கூடாய், ஜாலான் ஏமாஸ் புத்தி பகுதியில் உள்ள ஒரு உணவகத்திற்கும் சுங்கை தஞ்சொ9ஒங் செம்ப்ராங்கிற்கும் இடையே, 39 வயதான லோ காய் சியான் என்பவரைக் கொலை செய்ததாக அந்த நால்வர் மீதும் கூட்டாகக் குற்றம் சாட்டப்பட்டது.
அவர்கள் மீது, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302-இன் கீழ், பிரிவு 34-உடன் சேர்த்து குற்றம் சாட்டப்பட்டது. இப்பிரிவின்படி, குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும், மரண தண்டனை விதிக்கப்படாவிட்டால், குறைந்தது 12 பிரம்படிகளும் விதிக்கப்படும்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *