இத்தாலி அருங்காட்சியகத்தில் ரூ.770 கோடி மதிப்புள்ள 4 அபூர்வ ஓவியங்கள் கொள்ளை

top-news
FREE WEBSITE AD

மிலன்: இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள மெசினா பிராந்திய அருங்காட்சியகத்தில், மறுமலர்ச்சி காலத்தைச் சேர்ந்த சுமார் ரூ.770 கோடி மதிப்புள்ள நான்கு அபூர்வ ஓவியங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி இரவு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற சிசிலிய ஓவியரான அன்டோனெல்லோ டா மெசினா வரைந்த இந்தக் கலைப்படைப்புகள் மிகுந்த வரலாற்று மற்றும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்தவை. கொள்ளையர்கள் அருங்காட்சியகத்தின் பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை அமைப்புகளைத் தாண்டி உள்ளே நுழைந்து, பாதுகாப்புக் கண்ணாடிப் பெட்டியை உடைத்து ஓவியங்களை எடுத்துச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொள்ளையர்கள் முதலில் சான் கிரெகோரியோ பலகை ஓவியத் தொகுப்பின் ஐந்து பலகைகளையும் எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் தப்பிச் செல்லும்போது அவற்றில் இரண்டு பலகைகளை அங்கேயே விட்டுச் சென்றுள்ளனர். இதனால் மூன்று பலகைகளும் மேலும் ஒரு இருபக்க ஓவியமும் தற்போது காணாமல் போயுள்ளன.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *