பந்திங் தெலுக் டத்தோ ஜூக்ரா ஸ்டேடியத்தில் நட்பு முறையிலான கால்பந்தாட்டப் போட்டி!

top-news

பந்திங், செப்.27-

இன்று 27.9.2024 வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில், பந்திங் நகரை ஒட்டியுள்ள தெலுக் டத்தோ ஜூக்ரா ஸ்டேடியத்தில் கோலலங்காட் மாவட்ட கெ அடிலான் இளைஞர்களும் சிப்பாங் மாவட்ட கெஅடிலான் இளைஞர்களும் நட்பு முறையிலான கால்பந்தாட்டப் போட்டியில் பங்கேற்கவிருப்பதாக கோலலங்காட் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் ஹரிதாஸ் ராமசாமி தெரிவித்தார்.

அன்றைய தினம் சிறப்பு அழைப்பாளராக வருகைதரும் ஆட்சிக் குழு உறுப்பினரும் தஞ்சோங் சிப்பாட் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ ஹாஜி போர்ஹான் அமான்ஷா நட்பு முறை கால்பந்தாட்ட த்தை அதிகாரப் பூர்வமாக த் தொடக்கி வைப்பார் என்று அவர் கூறினார். அரசியல் கூட்டம், நிகழ்ச்சி கள் என இடைவிடாது பயணித்துக் கொண்டிருக்கும் கெ அடிலான் கட்சியின் இளைஞர் பிரிவினர் நட்பு முறையில் ஏற்பாடு செய்துள்ள கால்பந்தாட்டத்தில் களம் இறங்கி தங்களது நட்பைப் பலப்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த நிகழ்ச்சியை தாம் அனைவரது ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்துள்ளதாக கோலலங்காட் கெஅடிலான் தொகுதித் தலைவருமான ஹரிதாஸ் தெரிவித்தார்.

நட்பு முறையில் நடைபெறவிருக்கும் இந்த கால்பந்தாட்டத்தில் வெற்றி பெறும் போட்டி யாளர்களுக்கு பரிசுக் கோப்பை மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுவர் என்று அவர் கூறினார்.



https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *