38 வருடங்களுக்கு பின் ரஜினி - சத்யராஜ் நண்பர்களாக நடிக்கும் கூலி!

top-news
FREE WEBSITE AD

கோலிவுட்டின் தற்போதைய மோஸ்ட் வாண்டட் இயக்குநராக திகழ்ந்துகொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். லோகேஷ்  கமல் ஹாசனை வைத்து விக்ரம் என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்தார். அடுத்து அவர் இயக்கிய லியோ படம் சறுக்கியது.

சூழல் இப்படி இருக்க ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்குகிறார் லோகேஷ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. கமலுக்கு கொடுத்த மெகா ஹிட் போல ரஜினிக்கும் லோகேஷ் மெகா ஹிட் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதம் தொடங்கவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க கூலி படத்தில் சத்யராஜ் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. இதில் அவர் ரஜினிக்கு நண்பராக நடிக்கவிருக்கிறார். இதனை சத்யராஜே உறுதிப்படுத்தியிருக்கிறார்.

இருவரும் இணைந்து மிஸ்டர் பாரத் படத்தில் ஏற்கனவே நடித்திருந்தார்கள். அதற்கு பிறகு சில காரணங்களால் இருவரும் நடிக்கவில்லை. ரஜினி மீது இருந்த வருத்தத்தின் காரணமாகத்தான் சிவாஜி படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் சத்யராஜ் நிராகரித்தார் என்று சொல்லப்பட்டது, இப்போது ரஜினியுடன் சத்யராஜ் நடிப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியும், ஆச்சரியமும் அடைந்திருக்கின்றனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *