அர்ஸ்லன்பெக் மக்முடோவை வீழ்த்தினார் டைசன் பியூரி

top-news

லண்டன், ஏப். 12-

 முன்னாள் உலக ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியன் Tyson Fury 15 மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் களமிறங்கி, ரஷ்ய வீரர் அர்ஸ்லன்பெக் மக்முடோவை வீழ்த்தி வெற்றியைப் பதிவு செய்தார்.

லண்டனில் உள்ள டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் மைதானத்தில் நடைபெற்ற இந்த மோதலில், இரண்டு முறை உலக சாம்பியனான பியூரி, 12 சுற்றுகள் கொண்ட போட்டியின் முடிவில் நடுவர்களின் ஒருமித்த தீர்ப்பில் வெற்றி பெற்றார்.

மூன்று நடுவர்களில் இருவர் 120-108 என்ற கணக்கில் பியூரிக்கு ஆதரவாக மதிப்பெண் வழங்கினர். மற்றொரு நடுவர் 119-109 என்ற கணக்கில் வெற்றியை அறிவித்தார்.

போட்டியின் தொடக்க சுற்றுகளில் மக்முடோவ் சிறப்பாக செயல்பட்டு, இடது கை தாக்குதல்களுடன் வலது கை பஞ்ச்களையும் துல்லியமாக செலுத்தி பியூரிக்கு சவால் அளித்தார்.

ஆனால் மூன்றாவது சுற்றிலிருந்து மக்முடோவ் சோர்வடைந்ததைக் கவனித்த பியூரி தனது தாக்குதல் பாணியை மாற்றி, வேகமான ஒன்று-இரண்டு காம்பினேஷன் பஞ்ச்களை எதிராளியின் தாடைப் பகுதியில் துல்லியமாகப் பதித்தார்.

அதன்பின்னர் போட்டியின் கட்டுப்பாட்டை முழுமையாக கைப்பற்றிய பியூரி, அனுபவத்தையும் திறமையையும் வெளிப்படுத்தி வெற்றியை உறுதி செய்தார்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *