நம்பிக்கையில்லை என்றால் பதவியிலிருந்து விலகுங்கள்! - ஜாஹிட்டுக்கு கோபிந்த் சிங் டியோ பதில்
- Shan Siva
- 12 Nov, 2026
கோலாலம்பூர், நவ 12: பிரதமர் அன்வார் இப்ராஹிமின் தலைமைத்துவத்தில் நம்பிக்கை இல்லையென்றால், துணைப் பிரதமர் பதவியிலிருந்து அஹமட் ஜாஹிட் ஹமிடி விலகலாம் என்று டிஏபி தலைவர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்ற ஜாஹிட்டின் பரிந்துரை பொருத்தமற்றது என்றும், நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் பிரதமர் அன்வாரிடமே இருப்பதாகவும் கூறினார்.
அமைச்சரவை சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும், நாட்டின் பொருளாதாரம் நிலையாக இருப்பதாகவும் குறிப்பிட்ட கோபிந்த், சவால்கள் இருந்தபோதிலும் மலேசியா தொடர்ந்து முதலீட்டாளர்களைக் கவரும் நாடாக விளங்குவதாகத் தெரிவித்தார்.
அன்வாரின் தலைமைத்துவத்தில் நம்பிக்கை இல்லையென்றால், துணைப் பிரதமர் பதவியை ஜாஹிட் ராஜினாமா செய்யலாம். அதேபோல், அம்னோவும் தேசிய முன்னணியும் அன்வாரின் தலைமையை ஏற்கவில்லை என்றால், அவர்களும் அரசாங்கத்திலிருந்து விலகலாம். பிரதமருக்கு நெருக்கடி கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

