அதிமுக-வுக்கு ஓட்டு போட்டால் பாஜக ஆட்சி தான் - மு க ஸ்டாலின்!

top-news
FREE WEBSITE AD

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 300-க்கும் மேற்பட்ட புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிப் பேசினார்.

அண்மையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வந்தார். செய்திகளில் பார்த்திருப்பீர்கள். அவர் பேசியதெல்லாம் பார்த்தபோது, அவர் "அமித் ஷா"-வா? இல்லை, "அவதூறு ஷா"-வா? என்று சந்தேகம் வருகிறது! அந்தளவிற்கு உண்மைக்குப் புறம்பாக பேசிவிட்டு சென்றிருக்கிறார்.

தமிழ்நாட்டில் இந்து சமய நம்பிக்கைகள், வழிபாட்டு உரிமைகளுக்கு முடிவுகட்டும் வகையில், நம்முடைய தமிழ்நாடு செயல்படுவதாக அமித்ஷா பேசிவிட்டு சென்றிருக்கிறார். இதற்காக என்னுடைய கடுமையான கண்டனத்தை உங்கள் மூலமாக, இந்த விழாவின் மூலமாக, இந்த நிகழ்ச்சியின் மூலமாக தெரிவித்துக்கொள்கிறேன். அவருக்கு தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.

மேலும், "2026-ல் தமிழ்நாட்டில் மோடி ஆட்சி அமைய வேண்டுமா?" என்று அமித் ஷா கேட்டிருப்பதைப் பார்த்தால், அ.தி.மு.க-வுக்கு வாக்களிப்பது என்பது பா.ஜ.க-வுக்கு வாக்களிப்பதற்குச் சமம் என்பதை அவரே ஒப்புக்கொண்டுள்ளார் என்று ஸ்டாலின் விமர்சித்தார்.

அ.தி.மு.க. வெற்றி பெற்றால் டெல்லியில் இருந்து பா.ஜ.க. தான் தமிழகத்தை ஆளும் என்பதை அமித் ஷாவே உறுதி செய்துவிட்டதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர், இதற்கு அமித் ஷாவுக்குத் தனது நன்றியைத் தெரிவிப்பதாகக் கிண்டலாகக் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *