பாலியல் தொந்தரவு புகார்: தன்முனைப்பு பேச்சாளருக்கு மேலும் 2 நாட்கள் தடுப்புக் காவல்
- Surendran Sumdraraj
- 05 Oct, 2026
காங்கார், அக். 5 –
பாலியல் தொந்தரவு புகார் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக தன்முனைப்பு பேச்சாளர் ஒருவரின் காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
காங்கார் நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற விசாரணையின் போது, மாஜிஸ்திரேட் ஆனா ரோசானா முகமது நோர், அந்த நபரை நாளை வரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்த புதிய புகார் தொடர்பான விசாரணை மலேசிய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 509, 1998ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் பிரிவு 233 மற்றும் 1955ஆம் ஆண்டு சிறு குற்றங்கள் சட்டத்தின் பிரிவு 14 ஆகியவற்றின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 வயதுடைய இளம்பெண் ஒருவர் அளித்த போலீஸ் புகாரைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபரை போலீசார் நேற்று மாலை மீண்டும் கைது செய்தனர். அதன் பின்னர் விசாரணையைத் தொடர ஏதுவாக அவரது காவலை நீட்டிக்க நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கப்பட்டது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

