பாதிக்கப்பட்ட மாணவர்கள் புகார் அளிப்பதற்குப் பயப்பட வேண்டாம்-ஃபத்லினா சிடெக்!
- Muthu Kumar
- 26 Oct, 2024
நிபோங் தெபால், அக் 26:
பாலியல் துன்புறுத்தல் வழிகாட்டுதல்களை மேம்படுத்துமாறு அனைத்துப் பள்ளிகளுக்கும் கல்வி அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது. அதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் புகார் அளிப்பதற்குப் பயப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அனைத்து தரப்பினரும் அவற்றைப் பின்பற்றி கடைப்பிடிப்பார்கள் என்றும் அமைச்சர் ஃபத்லினா சிடெக் கூறினார்.
பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்று தாங்கள பலமுறை குறிப்பிட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.பள்ளிகள் பாதுகாப்பான இடங்கள், மேலும் முழு பள்ளி சுற்றுச்சூழல் அமைப்பும் குழந்தைகளின் பாதுகாப்பை ஆதரிக்கிறது என்பதை தாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம் என்று அவர் கூறினார்.
எனவே அமைச்சகத்தின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களில் இந்த பிரச்சனையை நிவர்த்தி செய்வது உட்பட பாலியல் துன்புறுத்தல் குறித்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளதை தாம் மீண்டும் வலியுறுத்துவதாக அவர் கூறினார்.
மேலும் இந்த வழிகாட்டுதல்களுக்கு அனைத்து தரப்பினரும் முழு பொறுப்பையும் ஏற்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *