புற்றுநோயால் உயிரிழந்த ‘கில்லி’ பட நடிகர் சிவா; திரையுலகம் இரங்கல்
- Surendran Sumdraraj
- 29 Jul, 2026
சென்னை, ஜூலை 29-
நடிகர் விஜய் நடித்த ‘கில்லி’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான நடிகர் சிவா, புற்றுநோயுடன் நீண்ட காலமாக போராடி வந்த நிலையில் காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகினரையும் ரசிகர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
‘கில்லி’ திரைப்படத்தின் தொடக்கக் காட்சியில் நடித்ததன் மூலம் அவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அந்தக் கதாபாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்றதால், பின்னர் அவர் “கில்லி சிவா” என்றே ரசிகர்களால் அழைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து விஜய் நடித்த மேலும் சில திரைப்படங்களிலும் அவர் தோன்றியிருந்தார்.
கடந்த சில ஆண்டுகளாகப் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த சிவா, உடல்நலக்குறைவு காரணமாக திரைப்படங்களில் அதிகமாக நடிக்கவில்லை. இருப்பினும், தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருந்தார்.
அவரது மறைவு செய்தி வெளியானதைத் தொடர்ந்து, திரையுலக பிரபலங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



